ஆம்பூர் பிரியாணி அதிரடி ஆஃபர் விலையுடன் விற்பனை.. இரண்டு பிரியாணி வாங்கினால்அரை கிலோ தக்காளி இலவசம்.. ஒரு கிலோ தக்காளி கொடுத்தால் ஒரு பிரியாணி இலவசம்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சோத்துப்பாக்கத்தில் இயங்கி வரும் ஆம்பூர் பிரியாணி கடையில் இன்று அதிரடி ஆஃபர் அறிவித்து விற்பனை செய்யப்படுகிறது.

முழு பிரியாணி இரண்டு வாங்கினால் அரை கிலோ தக்காளி இலவசம் என்றும், அதேபோல் ஒரு கிலோ தக்காளிக்கு ஒரு பிரியாணி இலவசம் போன்ற சலுகையை அறிவித்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்று ஒருநாள் மட்டுமே இப்படி விற்பனை செய்ய காரணம், இயற்கை சீற்றத்தால் அழிந்து வரும் விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆஃபர் வழங்கப்படுகிறது. இப்போது தக்காளி விலை, பெட்ரோல், டீசல் விலையைவிட நாளுக்கு நாள் விலை உயர்கிறது. இதை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்காளி விலை உயர்வை குறைக்க வேண்டுமென்றால் மக்கள் அனைவரும் வீட்டு மாடியில் தோட்ட பயிர் செய்வதன் மூலம் இந்த விலை உயர்வை குறைக்க முடியும் என கடை உரிமையாளர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே