திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

திமுக முன்னாள் அமைச்சரும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி. சாமி உடல்நலக் குறைவால் காலமானார்.

திமுக மீனவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.பி.பி. சாமி, கடந்த 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.பி.பி.சாமி, கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்தார்.

இந்த நிலையில், கே.வி. குப்பம் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே