வாடிக்கையாளர்கள் ஷாக்..!! ஏர்டெலை தொடர்ந்து வோடஃபோன் கட்டணமும் உயர்வு..!!

ஏர்டெல் நிறுவனம் பிரீபெய்ட் கட்டணத்தை உயர்த்துவதாக நேற்று அறிவித்த நிலையில், வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனமும் கட்டண உயர்வை இன்று அறிவித்துள்ளது.

முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல், அதன் போஸ்ட் பெய்டு திட்டங்களுக் கான கட்டண விகிதத்தை கடந்த ஜூலை மாதம் அதிகரித்தது. இந்நிலையில் ப்ரீ பெய்டுக் கான கட்டண விகிதத்தை இப்போது அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் வரும் 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது.

இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில், வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனமும் பிரீபெய்ட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்தப் புதிய கட்டண விகிதங்கள் வரும் 25 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

தொழில்துறையில் சந்திக்கும் நிதி அழுத்தங்களை சமாளிக்க இந்த கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சில பிரீபெய்ட் கட்டணங்கள் ஏர்டெல்லை விட குறைவாக இருந்தாலும் சில கட்டண விகிதங்கள் சராசரியாகவே இருக்கிறது.

அதன்படி குறைந்த பட்சக் கட்டணமான ரூ.79 திட்டம் ரூ.99 -க்கும் அதிகப்பட்ச கட்டணமான ரூ.2,399 திட்டம் ரூ. 2,899-க்கும் உயர்த்தப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டாப் அப் கட்டணமும் அதிகரித்துள்ளது. குறைந்த பட்ச ரூ.48 திட்டம், ரூ.58 ஆகவும் ரூ.351 திட்டம் ரூ. 418 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே