#BREAKING | 6 மாதங்களுக்கு வட்டிக்கு வட்டியில்லை – மத்திய அரசு அதிரடி..!!

சிறுதொழில், கல்வி, வாகனம், வீடு, தனிநபர் கடன்களுக்கு மார்ச் 1 முதல் ஆக.31 வரை வட்டிக்கு வட்டிக்கு வசூலிக்கப்படாது;

ரூ.2 கோடி வரையிலான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி பொருந்தும்! – மத்திய அரசு அறிவிப்பு!

கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை 6 மாத தவணைக்கு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து தேசிய வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகள், நிதி நிறுவனங்களில் ரூ.2 கோடிக்கும் குறைவாக கடன் பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே வட்டி சலுகை பொருந்தும்.

சிறு, குறு தொழில் கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், நுகர்வோர் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

வாகன கடன், தனி நபர் கடன் பெற்ற பயனாளிகளுக்கும் வட்டிக்கு வட்டி ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரூ.2 கோடிக்கு மேல் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி இல்லை.

கிரெடிட் கார்டு நிலுவை தொகை வைத்திருப்போருக்கும் 6 மாத வட்டிக்கு வட்டி தள்ளுபடி பொருந்தும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே