தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 31வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

2011ம் ஆண்டு வெளியான நூவில்லா எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான இந்த இளம் ஹீரோவுக்கு அர்ஜுன் ரெட்டி படம் இந்தியளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தை அளித்தது.

அர்ஜுன் ரெட்டி படத்தின் அபார வெற்றியை தொடர்ந்து அந்த படம் தமிழில் ஆதித்ய வர்மா என்ற தலைப்பிலும், இந்தியில் கபீர் சிங் என்றும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

டோலிவுட்டின் ‘ரவுடி’ என செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் 31வது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

டிவிட்டரில் #HappyBirthdayVijayDeverakonda என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி தெறிக்க விட்டு வருகின்றனர்.

தென்னிந்திய பெண்களின் லேட்டஸ்ட் ட்ரீம் பாயாக வலம் வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், நோட்டா, நடிகையர் திலகம், டாக்ஸி வாலா என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

பெண்களை வசிகரீக்கும் அழகான சிரிப்பை கொண்டு இருக்கும் இவருக்கு ரசிகைகள் எக்கச்சக்கம்.

டோலிவுட் ரசிகர்களின் செல்லமான ரவுடி பேபியாக அசத்தி வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கி வரும் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக பாலிவுட்டிலும் அசத்த ரெடியாகி விட்டார்.

தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாக உள்ள ஃபைட்டர் படத்தில் இவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய சினிமா உலகில் சாக்லேட் பாயாகவும், ரொமான்டிக் ஹீரோவாகவும் தனக்கென ஒரு தனி ஸ்டைலை வைத்துக் கொண்டு கெத்துக் காட்டி வருகிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா.

அர்ஜுன் ரெட்டி படத்தை பார்த்த பின்னர், என்னடா இப்படி நடிக்கிறானே என பலரும் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடினர்.

விஜய் தேவரகொண்டாவின் பெயரிலேயே விஜய் இருப்பதால் என்னம்மோ தெரியவில்லை, விஜய் ரசிகர்களுக்கு அவர் ஃபேவரைட் ஹீரோவாகவே இருந்து வருகிறார்.

தளபதி விஜய்யின் சார்பாக விஜய் ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை குவித்து ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்ய உதவி செய்து வருகின்றனர்.

கே.ஜி.எஃப் படத்தின் மூலம் இந்திய திரையுலகையே தனது பக்கம் திருப்பிய நம்ம ராக்கி பாய் யஷ்ஷின் ரசிகர்கள் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

கர்நாடகத்திலும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது இதன் மூலமாக வெளிச்சப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 500 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே

%d bloggers like this: