சென்னையில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதுவரை 6,009 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 3, 043 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது மூதாட்டியும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 56 வயது பெண்ணும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலை உயிரிழந்தனர்.
இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே, விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கோயம்பேடு சந்தை மூலம் தொடர்புடைய மேலும் 60 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் மட்டும் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.