பிரதமர் மோடி – இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே சந்திப்பு

இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்சே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு உறவு தொடர்பாக சனிக்கிழமை முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபட்ச 5 நாள் அரசுமுறைப் பயணமாக வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவுக்கு வந்தாா்.

பிரதமரான பிறகு அவா் மேற்கொள்ளும் அரசுமுறை வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இந்த நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கர் ஆகியோரை ஹைதராபாத் இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாா்.

இந்தியா-இலங்கை இடையிலான வா்த்தகம், பாதுகாப்பு, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, அவருக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே