தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

தமிழகத்தில் துணை ஆட்சியர், டிஎஸ்பி காலி பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற இருந்தது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று குரூப்- 1 (தமிழக குடிமைப் பணி தேர்வுகள் குரூப் 1) தேர்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் என 66 காலி பணியிடங்களுக்கு 2.67 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் 856 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் காலை முதலே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத் தொடங்கினர்.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே