இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயிர் இழப்பீடு அதிகம் வழங்கப்பட்டுள்ளது – முதல்வர் பழனிசாமி பேச்சு..!!

தூத்துக்குடியில் பருத்தி விவசாயிகளுடன் முதல்வர் பழனிசாமி கலந்துரையாடி வருகிறார். கோவில்பட்டி தொகுதிக்கு உட்பட்ட வில்லுச்சேரியில் விவசாயிகளுடன் முதல்வர் சந்தித்து பேசி வருகிறார்.

இதுகுறித்து முதல்வர் கூறுகையில்: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பயிர் இழப்பீடு அதிகம் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பிரச்னையை அறிந்து தமிழக அரசு திட்டமிட்டு சரி செய்து வருகிறது.

மேலும் , நீர் மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் ரூ.9,000 கோடி பயிர் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த உரையாடலில் முதல்வர் பழனிசாமி மேலும் பேசியதாவது:

தமிழக அரசின் 7.5 மருத்துவ உள் ஒதுக்கீடு மசோதாவால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 313 பேருக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்துள்ளது.

92 பேர் பல்மருத்துவர்களான இடம் கிடைத்துள்ளது. மேலும், அடுத்த ஆண்டு 11 அரசு மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதில் 130 இடங்கள் தமிழக அரசு சார்பில் ஒதுக்கப்பட உள்ளது.

இதனால், அடுத்த ஆண்டு 443 பேர் அரசு மருத்துவ கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும்.

150 பேர் பல்மருத்துவர்களான இடம் கிடைக்கும்.

அதற்கான கல்விக் கட்டணத்தை அரசாங்கமே செலுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே இதையெல்லாம், இந்த நாட்டுக்காக உணவளிக்கின்ற வேளாண் பெருமக்கள், வேளாண் தொழிலாளிகள், அவர்களுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி தமிழக அரசு அறிவித்த திட்டங்களை வேளாண் பெருமக்கள், வேளாண் தொழிலாளிகள் இருக்கின்ற இந்த கூட்டத்தில் தெரிவிப்பதால் பெருமைக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே