டிஎன்பிஎஸ்சி முறைகேடு – அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை

குரூப்-4 தேர்வை ரத்து செய்யும் திட்டமில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக பணியாளர், நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாதவாறு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இந்த முறைகேடு புகாரால் டிஎன்பிஎஸ்சியின் நம்பகத்தன்மையை சந்தேகிக்கக்கூடாது என கேட்டுக்கொண்ட அவர், தவறு செய்த கறுப்பு ஆடுகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

தவறு இழைத்தவர்கள் யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என குறிப்பிட்ட அவர், குரூப்-4 முறைகேடு புகார் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

16 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 தேர்வை 99 பேருக்காக ரத்து செய்வது நியாயமாக இருக்காது என தெரிவித்த அவர், பயிற்சி மையங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக விரைவில் சட்டம் இயற்ற உள்ளதாகவும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே