8ம் வகுப்புக்கு சிறப்பு வகுப்புகள் கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன்

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி முடிந்த பிறகு ஒரு மணி நேரம் கூடுதலாக சிறப்பு வகுப்பு நடைபெறும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக வரும் தகவல் தவறானது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே சிறப்பு வகுப்பு எடுக்க பரிசீலனை செய்யப்படுவதாக கூறினார். 

மேலும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளோ, மாதிரி பொதுத்தேர்வுகளோ நடத்தப்படாது என்று இயக்குநர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே