தமிழகத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் சங்ககிரியில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே