கண் இமைக்கும் பொழுதில் மகளுடன் லாரி சக்கரத்தில் சிக்கிய தாய்

சில நொடி கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் தாயும் மகளும் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம், மலைப் பகுதியை சேர்ந்த சித்ரா ஈரோடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்.

இவர் தன்னுடைய ஆறு வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை கடந்து நின்ற நிலையில், பள்ளி பேருந்து ஒன்று சாலையை கடந்தது.

அப்போது சாலையின் ஒரு புறத்தை கவனிக்காமல் சித்ரா கடக்க முயன்றபோது, அந்த வழியாக சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய சித்ராவும், அவருடைய மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள்.

ஒரு சில வினாடிகள் காத்திருந்து சாலையின் இருபக்கத்திலும் வாகனம் எதுவும் வராததை உறுதி செய்த பின்னர் சாலையை கடந்து இருந்தால், விபத்து ஏற்பட்டிருக்காது என்று அப்பகுதி மக்கள் சிலர் வேதனையுடன் தெரிவித்தார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே