சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்தது.
சென்னையில் வேப்பேரி, புரசைவாக்கம், எழும்பூர், பெரியமேடு, சின்னமலை, கிண்டி, அடையாறு, கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
பம்மல், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருநின்றவூர், அனகாபுத்தூர், மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை, ஆரம்பாக்கம், கவரப்பேட்டை, மாதர்பாக்கம் செங்குன்றம், புழல், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானடோரியம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது.
திருவாரூர் மாவட்டத்தில், மன்னார்குடி, கூத்தாநல்லூர், திருமக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
கோவை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்தது.
இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.