ஓய்வை அறிவித்த கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2003ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானவர் இர்ஃபான் பதான்.

இடதுக்கை வேகப்பந்து வீச்சாளரான இவர் 301 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

இர்பான் பதான் இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒரு நாள் மற்றும் 24 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 301 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.

2006ம் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

2007 டி20 உலக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் இர்ஃபான் பதான் தட்டி சென்றார் என்பது குறிப்பிடதக்கது.

கடைசியாக இவர் கடந்த 2012இல் நடந்த டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

கடந்த 8 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இர்பான் பதான் இன்று தனது சர்வதேச பயணத்துக்கு விடை கொடுத்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவுள்ள பதான், இந்த அறிவிப்பை தனியார் தொலைக்காட்சியின் லைவ் பேர்வெல் பதான் தி சுவிங் கிங் நிகழ்ச்சியின் மூலம் மாலை 4:30 மணிக்கு வெளியிட்டார்.

இதையடுத்து, எல்லா விதமான கிரிக்கெட் போட்டியிலும் இருந்தும் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே