ராணுவ பட்ஜெட்டை 6.8% உயர்த்திய சீனா: இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்!

தனது நாட்டு ராணுவத்திற்கு பட்ஜெட்டில் 209 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது சீனா. இது இந்தியாவை விட 3 மடங்கு அதிகமாகும்.

20 லட்சம் வீரர்களுடன் சீன ராணுவம் உலகின் பெரிய ராணுவமாக திகழ்கிறது. உலகிலேயே ராணுவத்துக்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், 2021-ம் ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட்டை 6.8 சதவீதத்துக்கு சீனா உயர்த்தி உள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட வரைவு பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 209 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சத்து 26 ஆயிரத்து 504 கோடி) ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீன ராணுவத்தின் தற்போதைய பட்ஜெட் இந்திய ராணுவ பட்ஜெட்டை விட 3 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த ஆண்டுக்கான ராணுவ பட்ஜெட் 65.7 பில்லியன் டாலராக (சுமார் ரூ.4 லட்சத்து 79 ஆயிரம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக்கில் இந்தியாவுடனான ராணுவ மோதல் மற்றும் அமெரிக்காவுடன் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றங்களுக்கு மத்தியில் சீனா தனது ராணுவ பட்ஜெட்டை முதல் முறையாக 200 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே