என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று ரஜினி தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் ஏற்பட்ட இரத்தம் அழுத்தம் காரணமாக அண்மையில் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ,பின்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சென்னை திரும்பினார்.

இதைத்தொடர்ந்து, ரஜினி அறிவிப்பு ஒன்றை அறிவித்தார். அதில், தான் அரசியலுக்கு வரப்போவது இல்லை என்று அறிவித்தார்.

இவரின் அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி அறிவித்த நிலையில், தங்களது கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சியினர் பலர் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக தங்களது கட்சிக்கு ரஜினி குரல் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் நேற்று “ஆன்மீக அரசியல் அழைப்பு விழா” என்ற பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ரஜினி ரசிகர்கள் “வா தலைவா வா” என்ற கோஷம் எழுப்பினர்.

இந்நிலையில் என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று ரஜினி தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வரமாட்டேன். மீண்டும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் போராட்டம் நடத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே