நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பிரச்சனைகள் பற்றி விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக கூறினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

அதே சமயம் பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சனை ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் குளிர் கால கூட்டத்தொடர் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கூட்டத்தொடரை சுமுகமாக நடக்கும் வகையில் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.

27 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ப்ரல்ஹாட் ஜோஷி, அவையின் முக்கியமான பணியே விவாதிப்பதுதான் என பிரதமர் மோடி பேசியதாக தெரிவித்தார்.

கடந்த முறை போலவே இந்த முறையும் கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் என உறுப்பினர்களிடம் பிரதமர் கேட்டுக்கொண்டதாகவும் ஜோஷி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே