இதுதான் என்னிடம் உள்ள சுஷாந்தின் சொத்து… சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ரியா..!!

நடிகர், சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், இப்போது சிபிஐ வசம் வழக்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே, சுஷாந்த் சிங்கின் நண்பர்கள், சினிமா இயக்குனர்கள், அவருடன் பழகிய நடிகர், நடிகைகள் உள்பட 38 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி அதைப் பதிவு செய்தனர்.

நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், ரியா சக்கரவத்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பாட்னா போலீஸில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “சுஷாந்த் சிங்கை, ரியா சக்கரவர்த்தி மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, நடிகை ரியா சக்கரவர்த்திக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் இதில் மோசடி நடந்திருப்பதாகவும்” தெரிவித்திருந்தார்.

அமலாக்கத்துறை இதையடுத்து பாட்னா போலீசாரும் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது குறித்து அமலாக்கத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்களும் ரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த வழக்கில், நடிகை ரியா சக்கரவர்த்தி நேற்று ஆஜரானார். அவரிடம் சுஷாந்த் சிங் டைரி குறித்து 9 மணி நேரம் நடந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் நடிகை ரியா சுஷாந்த் கைப்பட எழுதியது என கூறி டைரியின் பக்கம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், நன்றிகடன் பட்டவர்கள் என்ற தலைப்பில் உள்ள அந்த பக்கத்தில் தாம் வாழ்க்கைக்கு நன்றி கடன் பட்டுள்ளதாகவும் வாழ்வில் லில்லு,பெபு, சார் மற்றும் மேடமுக்கு நன்றி கடன் பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது. இதில் பெபு என்று குறிப்பிட்டு இருப்பது ரியா எனவும், லில்லு ரியாவின் சகோதர் சோவிக் எனவும், சார் என்பது ரியாவின் தந்தை எனவும், மேடம் அவரின் தாய் எனவும், புட்ஜ் நாய் குட்டி எனவும் ரியா தெரிவித்து உள்ளார்.

என் வாழ்க்கையில் என் மீது அன்புகொண்ட அனைவருக்கும் நன்றியுடையவனாக இருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதோடு சுஷாந்த் நடித்த சிச்சோர் படத்தின் பெயர் பொறிக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதுதான் தன்னிடம் உள்ள சுஷாந்த் சிங்கின் சொத்து எனவும் தெரிவித்து உள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே