43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறு: அமைச்சர் விஜயபாஸ்கர் !!

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவர்கள் மரணம் குறித்த தகவலுக்கு இந்திய மருத்துவசங்கத்தின் தமிழக தலைவரும் மறுப்பு தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியவை யாதெனில், “கொரோனா மரண எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை.

சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனை சிகிச்சைகளில் உள்ளனர்.

மீதம் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில், கொரோனா தொற்றானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது” என பேசினார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே