தெலுங்கு சினிமாவின் ஆக்ஷன் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் நடனத்தில் மிகவும் புகழ்பெற்றவர். தென்னிந்தியாவில் ஒரு மிகச் சிறந்த நடன கலைஞர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு இவரது நடனம் அற்புதமாக இருக்கும்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘வைகுந்தபுரமுளோ’ என்ற திரைப்படம் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ், தபு, ஜெயராம், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி 200 கோடி வரை வசூல் செய்தது. படத்தில் உள்ள புட்டபொம்மா என்ற பாடல் யூடியூப் தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. தற்போது வரை இந்த பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
- வீடியோ: மகேஷ்பாபு, ராஷ்மிகா ஜோடியை போல் தனது மனைவியுடன் காதல் செய்யும் டேவிட் வார்னர்!
- அழகு நாயகி அதுல்யா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்!