விரைவில் விஜய் உடன் கூட்டணி – இசையமைப்பாளர் தமன்

விரைவில் விஜய் உடனான கூட்டணியை எதிர்பார்க்கலாம் என்று இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்துக்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் விஜய். சன் பிசர்ஸ் தயாரிக்க இருந்த இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். பின்னர் சன் பிக்சர்ஸ் உடனான கருத்து வேறுபாடு காரணமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகினார்.

இதையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜய்யின் 65-வது படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு படப்பிடிப்புக்கான லொகேஷன் தேடும் பணிகள் தொடங்கிவிட்டன. நெல்சனின் திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்து வரும் அனிருத் இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார்.

அதேவேளையில் சன் பிக்சர்ஸ் உடனான ஏ.ஆர்.முருகதாஸ் படம் கைவிடப்பட்டதால் விஜய் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறவில்லை. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய தமனிடம் விஜய்யுடன் உங்கள் கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘ஆம்’ என்று பதிலளித்துள்ளார் தமன். எனவே விஜய்யின் அடுத்த படத்தில் தமன் இசையமைக்க வாய்ப்பிருப்பதாக பேசப்படுகிறது.

மேலும் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு தான் மிகப்பெரிய ரசிகன் என்றும் தமன் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே