17 பேர் உயிரிழந்த வழக்கில் உரிய விசாரணை தேவை : திருமாவளவன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் நடந்த இடத்தை திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார். 

பின்னர் அந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தமது கட்சியினருடன் அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அதில விதிகளுக்கு புறம்பாக திட்டமிட்டு தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளதாகவும், இதற்கு காரணமான உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

மேலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே