ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனை!

வெங்காய விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், எகிப்து, துருக்கி நாடுகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், அதன்பின் வெங்காயம் விலை கட்டுக்குள் வரும் எனவும் தெரிவித்தார். 

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மழையின் காரணமாகவே வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது நிரந்தரமான விலையேற்றமாக இருக்கக்கூடிய பொருள் அல்ல எனவும் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

உள்ளாட்சி தேர்தல் முறையாக நடைபெறும் எனவும் அதில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே