ஆண்டிப்பட்டியில் தேமுதிக நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல்..

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் முதற்கட்டமாக உள்ளாட்சித் தோ்தல் வரும் டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தேர்தல் அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு உள்ளாட்சி கவுன்சிலருக்கு இரண்டுஇடங்களும், மாவட்ட கவுன்சிலருக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

கடைசி நாளான இன்று ஆண்டிபட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜான், கிழக்கு ஒன்றிய செயலாளர் TRN வரதராஜான், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கவுன்சிலர் பதவிக்கு பாலாக்கோம்பையை சேர்ந்த துரைமுருகன், தேக்கம்பட்டியை சேர்ந்த பவானி ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர்.

மாவட்ட கவுன்சிலருக்கு தேமுதிக சார்பில்
R.ஜெயலட்சுமி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிமுக முக்கிய நிர்வாகிகள், தேமுதிக முக்கிய நிர்வாகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கலில் கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் : C. பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே