பொன்னையனின் பேச்சுக்கு திருமாவளவன் கடும் கண்டனம்

சுபஸ்ரீ இன் மரணத்திற்கு காற்றின் மீது தான் வழக்குப் போட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறியிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கை திரும்பப் பெறுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசை திருப்திப்படுத்துவதில் நேரம் செலவழிக்கும் அதிமுக அரசு, சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது இல்லை என தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே