சென்னை: 2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு இன்னமும் சில மாதங்களே உள்ளன. தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந நிலையில் 2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தாண்டு நவ.16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.