ஃபரூக் அப்துல்லாவின் தந்தையை பதினோரு ஆண்டுகள் சிறையில் வைத்தது காங்கிரஸ் தான்

தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லாவின் தந்தையை பதினோரு ஆண்டுகள் சிறையில் வைத்தது காங்கிரஸ் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியிருக்கிறார்.

மக்களவை இன்று கூடியதும் ஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள்? என்று மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதுரி கேள்வி எழுப்பினார்,

எப்போது இயல்பு நிலை திரும்பும் என்றும் அவர் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் முற்றிலும் இயல்பு நிலை திரும்பி இருப்பதாக தெரிவித்தார்.

காங்கிரசைப் பொருத்தவரை இயல்பு நிலை என்பது என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் தலைவர்களை விடுவிப்பதற்கு உகந்த நேரம் வந்ததும் விடுவிக்கப்படுவார்கள் என்றும்; காங்கிரசை போன்று 11 ஆண்டுகள் சிறை வைக்க மாட்டோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே