நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் : சீமான்

நீட் தேர்வு மூலம் தரமான மருத்துவர்களை உருவாக்குவோம் என்று சொல்லிவிட்டு போலி மருத்துவர்களை உருவாக்கி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களிடம் காது, மூக்கு என பரிசோதித்த அதிகாரிகள், முகத்தை பார்க்க மறந்ததால் ஆள்மாறாட்டம் நடந்ததாக விமர்சனம் செய்தார்.

நீட் தேர்வில் தமிழகத்தில் ஆள்மாறாட்டம் செய்ததுபோல் வெளிமாநிலத்தில் எத்தனை பேர் ஆள்மாறாட்டம் செய்து இருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பிய சீமான், நீட் தேர்வு எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்கும் என்று விமர்சித்தார். மேலும் 2 தொகுதி இடைத்தேர்தலுக்கு தான் தற்பொழுது தீபாவளி என்கிற சீமான், தேர்தல் ஆணையம் 5 தொகுதிகளாக தேர்தல் நடத்தினால் மக்கள் மேலும் மகிழ்ச்சி அடைவர் என்று கிண்டலடித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே