இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து – கிரேன் ஆபரேட்டர் கைது

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது.

அப்போது 150 அடி உயர கிரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள்.

மேலும் இதில் 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் லைகா நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பின் கிரேன் ஆப்ரேட்டர் ராஜனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் லைகா நிறுவனம் மற்றும் கிரேன் ஆப்ரேட்டர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே