கருப்பு மாஸ்க் அணிந்து மனைவியுடன் காரில் செல்லும் தல அஜித்; வைரல் வீடியோ!

தல அஜித் குடும்பத்துடன் காரில் ஏறி செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இல்லையென்றாலும் நடிகர் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.

அவருடையே அடுத்த ஆண்டு மே 1ஆம் தேதி பிறந்த நாளுக்கு இப்போதே நாள் கவுண்ட் டவுன் தொடங்கியுள்ள ரசிகர்களும் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கருப்பு மாஸ்க், கேப் அணிந்துள்ள அஜித்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அஜித்தின் மனைவி ஷாலினி முதலில் காரில் ஏறுகிறார். பின்னால் வரும் அஜித் மாஸ்கை முகத்தில் மாட்டிக் கொண்டு பிறகு காரில் ஏறி செல்கிறார்.

அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் படம் தொடர்பான அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே