புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் 900 முதல் 1,200 எம்.பி.க்கள் அமரக்கூடிய வகையில் கட்டப்படவுள்ளது.

அதன் கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய தலைமைச் செயலகத்தை 2024-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

அந்த மனுக்களை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், கடந்த நவம்பா் மாதம் 5-ஆம் தேதி வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தது.

எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் மட்டும் நாட்டுவதற்கு கடந்த டிசம்பா் மாதம் 7-ஆம் தேதி அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த திட்டத்துக்கு டிசம்பா் 10-ஆம் தேதி பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, சென்ட்ரல் விஸ்டா திட்ட வழக்கில், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே