வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என டிவிட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தோந்தெடுப்பதற்கான தோதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி, இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த வாக்குப் பதிவின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள முடிவுகள், முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

எனினும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுப்பறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் ட்ரம்ப் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே