நீட் தேர்வுக்கு எதிராக 7 மாநிலங்கள் தொடர்ந்த சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொரோன பெருந்தொற்று சமயத்தில் தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நீட், ஜெ.இ.இ தேர்வுகளை தற்பொழுது நடத்தக்கூடாது என்று பஞ்சாப், ராஜஸ்தான், சதீஷ்கர், புதுச்சேரி, மேற்கு வங்கம் என மொத்தம் 7 மாநிலங்கள் இணைந்து மறு சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

இந்நிலையில் இன்று இந்த மறு ஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோரை கொண்ட அமர்வு முன் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநிலங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால், நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் எனத்தெரிகிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே