இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற நடராஜன் ட்வீட்..!!

இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன், டெஸ்ட் அணியின் சீருடையை அணிந்து அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 

3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு, 2-வது டெஸ்டின் போது காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, தமிழக வீரர் நடராஜன், டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார். 3-வது டெஸ்டில் சைனி அல்லது நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் சீருடையை அணிந்து அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடராஜன்.

வெள்ளைச் சீருடையை அணிவது பெருமிதமான தருணம். அடுத்தக்கட்ட சவால்களுக்குத் தயாராக உள்ளேன் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் பலரும் நடராஜனுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகிறார்கள்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே