புத்தகத்திற்கும், கணினிக்கும் வெளியிலும் கல்வி உள்ளது -கமல்ஹாசன்

உலக இளைஞர் திறன் தினத்தையொட்டி (World Youth Skills Day 2020) அனைத்து தலைவர்களும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இளைஞர்கள் குறித்து உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15 ஆம் தேதி உலக இளைஞர் திறன் தினம் (World Youth Skills Day) கொண்டாடப்படுகிறது.

இன்று உலக இளைஞர் திறன் தினம் என்பதால், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “நம்மை மேம்படுத்திடவே கல்வி என்பதை மறந்து புத்தகத்திற்குள்ளும், கணினிகளுக்குள்ளும் மாணவர்களை அமிழ்த்திக் கொண்டிருக்கிறோம்.

இவற்றிற்கு வெளியிலும் கல்வி உள்ளது என இந்த உலக இளைஞர் திறன் தினத்தில் நினைவுறுத்துவோம். திறனறிந்து அதை வளர்த்திடுவோம் என்று சொல்ல இதைவிட சிறந்த நேரமில்லை.

இவ்வாறு கமல்ஹாசன் அவர்கள் பதிவிட்டுள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே