ஆன்லைன் வர்த்தகத்தினை உடனடியாக தடை செய்ய கோரி தேனியில் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

தேனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஆன்லைன் வர்த்தகத்தினை உடனடியாக தடை செய்ய கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,

  • அமேசான், ப்ளிப்கார்ட், வால்மார்ட், மண்டி உட்பட தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஆன்லைன் வர்த்தகத்தையும் தடை செய்ய வேண்டும்.
  • இதன் மூலமாக தமிழகத்தில் சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவேண்டும்.
  • ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் காலாவதியான தரமற்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கும் மோசடியான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இந்த ஆன்லைன் வர்த்தகத்தால் பணப் புழக்கம் பரவலாக இல்லாமல் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் மட்டுமே தேக்கமடைந்து கிடக்கின்றன.

வேலைவாய்ப்பு இழப்பும், வணிக இழப்பும் ஏற்படும் நிலையை ஏற்படுத்தும் இந்த ஆன்லைன் வர்த்தகத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகளும், வர்த்தக சங்க நிர்வாகிகளும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் என அதிக அளவில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

நமது செய்தியாளர் : C. பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே