திமுக சார்பில் தேனியில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

தேனி மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரும் எதிர்ப்புகளுக்கு இடையில் குடியுரிமை சட்ட திருத்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் பல்வேறு பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகிறது.

தமிழகத்தில் திமுக சார்பில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில், தேனி-மதுரை நெடுஞ்சாலையில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து பங்களாமேடு என்ற பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர்களுக்கு எதிராக இயற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்து நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்

  • மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் மூக்கையா,
  • திமுகவின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன்,
  • ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன்,
  • பெரியகுளம் ஒன்றிய செயலாளர் ட.M பாண்டியன்,
  • பெரியகுளம் நகர செயலாளர் SB முரளி,
  • தேனி ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் : C. பரமசிவம்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே