சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு மே 3 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் மருத்துவர்கள் , காவல் துறையினர் , தூய்மை பணியாளர்கள் , ஊடக துறையினர் என கொரோனா வைரஸ் தொற்றுக்கிடையே தங்களை பாதுகாத்து கொண்டு பணியாற்றி வருகின்றனர்.
அவ்வாறு இருந்தும் கொரோனா தொற்றி கொள்கிறது. அதே போல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தூய்மைப்பணியில் இருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
3 வயது குழந்தை உட்பட அவரது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 5 பேருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீர்கள் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.