திருச்சி மாவட்டம் தாளக்குடியில் குப்பைத்தொட்டியால் முகத்தை மறைத்துக்கொண்டு தொழில் பயிற்சி மையத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயை திருடிச் சென்றுள்ளனர்.
தாளக்குடியில் இயங்கி வரும் பெண்கள் தொழில் பயிற்சி மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்குள்ள தையல் இயந்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை நோட்டமிட்டனர்.
பின்னர் சிசிடிவி கேமரா இருப்பதைப் பார்த்த கொள்ளையர்கள் குப்பைத்தொட்டியை தலையில் கவிழ்த்துக்கொண்டு முகத்தை மறைத்தவாறு மீண்டும் மையத்திற்குள் நுழைந்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயை திருடிச் சென்றனர்.
இது குறித்து பயிற்சி மையத்தின் நிர்வாகி ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.