நாகை மாவட்டம் வெளிபாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.

ஜம்மு- காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் நடந்ததைப் போல தமிழகத்திலும் கோவிலில் பாலியல் வன்கொடுமை கொடூரம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வெளிப்பாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற பெண்ணை தாக்கிய இளைஞர்கள் சிலர் கோயிலுக்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்தப்பெண் கணவரை இழந்தவர் என்று தெரியவந்துள்ளது. எனக்கு குழந்தை இருக்கிறது என்னை விட்டு விடுங்கள் என்று அழுத நிலையிலும் அந்த பெண்ணை விடாமல் சிதைத்துள்ளனர்.

பெண்ணை சிதைத்த அந்த கொடூர மிருகங்கள், அவரது சகோதரி வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெண்ணை வழிமறித்து தாக்கி கோயிலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மனித மிருகங்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறும்போது, ‘இரவு பணி முடித்து 11 மணிக்கு வீடு திரும்பி கொண்டிருந்தேன்.

அப்போது என்னை பின் தொடர்ந்து வந்தவர்கள் என்னை வாயை பொத்தி, அடித்து துண்புறுத்தி சித்ரவதை செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.

‘எனக்கு குழந்தைகள் இருக்கு.. என்ன விட்டுடுங்க’ என்று கதறினேன். நான் வேலைக்கு சென்ற கூலிப்பணத்தைக்கூட அவர்களிடம் கொடுத்து விட்டுவிடுமாறு மன்றாடி கதறினேன்.

ஆனால் 12.30 மணியில் இருந்து 3.00 மணிவரை விடாமல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர்’ எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கூறும்போது ‘குழந்தைகள் இருக்கு… விட்டுடுங்க என்று கதறும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது’ என்றார்.

இந்த கொடூர சம்பவம் நாகை மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே