வேகமாக திரும்பிய பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் தவறி விழுந்த காட்சி வெளியாகி இருக்கிறது.

அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கோகிலா என்பவர் பெருந்துறை செல்வதற்காக சேலத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

கோட்டைமேடு என்ற இடத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக சர்வீஸ் சாலையில் பாதை மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பகுதியில் வந்த பேருந்து வேகமாக திரும்பியது.

அப்போது பேருந்தில் உள்ளே நின்று கொண்டிருந்த கோகிலா தூக்கி வீசப்பட்டார். தார் சாலையில் இழுத்து வரப்பட்ட கோகிலா, சாலையோரம் இருந்த சாக்கடையில் தவறி விழுந்தார்.

இந்த காட்சி அங்கு கார் விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

காயமடைந்த கோகிலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு குமாரபாளையம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே