உலக உணவு தினம் இன்று கொண்டாடப்படுவதை ஒட்டி சென்னையில் உணவற்ற மக்களுக்கு உணவளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அண்ணா நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை ரெயின்போ டிராப்ஸ் சமூக அமைப்பு மற்றும் பிரியாணி பிரதர்ஸ் உணவகம் இணைந்து நடத்தியது.
இதில் கவிஞர் சினேகன் மற்றும் இசையமைப்பாளர் ரெஹானா ஆகியோர் கலந்து கொண்டு, உணவு வழங்க சென்ற வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, சாலையோரத்தில் வசிப்போருக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்.