முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் – வழக்குப்பதிவு..!!!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் புகார் தெரிவித்தார்.

மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது எனவே தன்னையும், தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மட்டுமின்றி அவரது நண்பர் பரணி என்பவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே