நீலகிரி சுற்றுவட்டாரத்தில் எலித் தொல்லையால் அவதிக்குள்ளாகும் விவசாயிகளுக்கு மணி என்பவர் பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறார்.
குறிப்பாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற மலை காய்கறிகளை விளைவிக்கும் நிலங்களில் அட்டகாசம் செய்யும் எலிகளை பொறி வைத்துப் பிடிக்கிறார்.
எல்லோராலும் எலி மணி என்று அழைக்கப்படும் இந்த மணி, ஒரு எலி பிடித்தால் 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விவசாயிகள் தருவதால் நல்ல வருமானம் கிடைப்பதாகவும் கூறுகிறார்.