ரயிலில் ஏசி பெட்டியில் இனி கம்பளிப் போர்வைகள் கிடையாது – தெற்கு ரயில்வே

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏ.சி ரயில் பெட்டிகளில் பயணிகளுக்கு கம்பளிப் போர்வைகள் வழங்கப்படமாட்டாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 107-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை, பேரிடராக அறிவித்திருக்கும் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் தெற்கு ரயில்வே சார்பில் இன்று விடுத்திருக்கும் அறிக்கையில்,

  • ரயிலில் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி வழங்கப்படமாட்டாது.
  • பயணிகள் யாருக்கேனும் தேவைப்பட்டால் மட்டுமே கம்பளிகள் வழங்கப்படும்.
  • ஆனால் பயணிகளுக்குத் தேவையான தலையணை, தலையணை உறைகள், பெட் ஷீட்டூகள் தொடந்து வழங்கப்படும்.
  • பயணிகளுக்கு ஏதேனும் இதில் மாற்றம் அல்லது புதிதாக பெட் ஷீட்டுகள் தேவைப்பட்டால் எங்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.
  • ரயில்வே துறை எடுக்கும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பயணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே