FASTAG கட்டணமுறை அமல்படுத்த கால அவகாசம் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு!

நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் லாரிகளுக்கு பாஸ்டேக் சுங்கக்கட்டண நடைமுறையை அமல்படுத்துவது ஜனவரி 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயத்தை தடுக்க பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்படவேண்டும்.

வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் தானாக கழியும் வகையில் நாடெங்கிலும் உள்ள சுங்கச்சாவடிகள் கணினியால் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை சுமார் 25 சதவீதத்தினர், இந்த அட்டையை இன்னும் வாங்கவில்லை என்பதால், அவர்களின் கோரிக்கையை ஏற்று சுங்கக்கட்டண நடைமுறையை அமல்படுத்துவது ஜனவரி 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே