ரிசர்வ் வங்கியின் கடன் வசூல் தடை அறிவிப்பு தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கான கேள்விகளும், பதில்களும்…

கொரானா தடுப்பு நடவடிக்கையின் தாக்கம் தினக்கூலி பணியாளர்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்காக, பல்வேறு பொருளாதார அறிவிப்புகளை மத்திய அரசு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்தா தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், குறுகிய கால கடனுக்கான வட்டி 0.75% குறைக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் 5.15 விழுக்காட்டில் இருந்து 4.4 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு உள்ளது என்றார்.

கொரோனா வைரஸால் ஏற்படும் பொருளாதார இழப்பை ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகின்றது.

இந்த இழப்பை சரிகட்ட 4 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும், அனைத்துவகையான கடன் வசூலை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 3 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களுக்கான கடன் வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால், ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் இ.எம்.ஐ செலுத்த தேவையில்லை.

கடன் செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கை கூடாது. மற்றும் சிபெல் மதிப்பெண்ணை குறைக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.

ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பு தொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கான பதில்கள் கீழே..

கேள்வி: கடன் வசூல் நிறுத்தி வைக்கும் அறிவிப்பு தேசிய வங்கிகளுக்கு மட்டுமா?

பதில்: பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என அனைத்திற்கும் பொருந்தும்.

கேள்வி: 3 மாதங்கள் கழித்து மொத்த தொகையையும் செலுத்த வேண்டுமா?

பதில்: இல்லை. வரும் 3 மாதங்கள் மட்டுமே இ.எம்.ஐ செலுத்த வேண்டாம். அதற்கு அடுத்து, வழக்கம் போல, ஒரு மாதத்திற்கான தொகையை செலுத்தினால் போதும்.

கேள்வி: நான் 6 மாதங்கள் இ.எம்.ஐ செலுத்த வேண்டும் என்றால், இப்போது 3 மாதங்கள் மட்டும் செலுத்தினால் போதுமா?

பதில்: இல்லை. உங்கள் கடனை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. எனவே, மாதங்கள் கழித்து அதே கடன் தொகையை செலுத்த வேண்டும்.

கேள்வி: இ.எம்.ஐ செலுத்த வில்லை என்றால் சிபெல் மதிப்பெண் குறையாதா?

பதில்: கடன் தொகையை செலுத்தவில்லை என்பதற்காக திவால் நடவடிக்கையோ, சிபெல் மதிப்பெண்ணை குறைக்கும் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே