நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி.. பிரதமர் மோடி பேச்சு..!! (வீடியோ)

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழகம் உள்பட 10 மாநில முதல்வர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் நிறைவாக பிரதமர் மோடி உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது,

  • நாட்டில் 80 சதவிகித கரோனா தொற்று பாதிப்பு 10 மாநிலங்களில் மட்டுமே உள்ளது.
  • இறப்பு குறைந்து, குணமடைவோர் அதிகரிப்பது நாம் கரோனா தடுப்பில் சரியான பாதையில் செல்வதையே காட்டுகிறது.
  • கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது.
  • கொரோனா தடுப்பு பணிகள் சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
  • சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர்.
  • COVID19 பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது-புதிய சூழலும் உருவாகிறது.
  • கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்களின் பங்கு இன்றியமையாதது.
  • கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • அதிகம் பாதித்த மாநிலங்கள் பேசும் போது தடுப்பு பணிகள் மேலும் வலுவடையும்.
  • இதனால் நம்பிக்கை அதிகரித்து அச்சம் குறைகிறது.
  • பாதிப்பு குறைவது நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பேசிய வீடியோ பதிவு:

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே