உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை கண்டு பிடித்தது ரஷ்யா. அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை படைத்துள்ளது. செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று இதுவரை 2 கோடி பேரை பாதித்துள்ளது.
சுமார் 7.32 லட்சம் பேர் வரை இறந்துள்ளார்கள். ஒவ்வொரு நாளும் 2 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு மருந்து கண்டுபிடிக்க உலகமே போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த ரஷ்யா, அதன் மருத்துவ சோதனையை ஜூன் 18 அன்று தொடங்கியது 38 தன்னார்வலர்களுக்கு பரிசோதித்தது.
அனைத்து பங்கேற்பாளர்களும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறியது.. தடுப்பூசி போட்டுக்கொண்ட முதல் குழுவினர் ஜூலை 15 ம் தேதியும், இரண்டாவது குழுவினர் ஜூலை 20 ம் தேதியும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் இந்நிலையில் ‘‘இன்று காலை உலகின் முதன்முறையாக கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி எனது மகள் உடலில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். பரிசோதனை முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிராக நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.